மாநில கபடி போட்டி: விருதுநகர் முதலிடம்
திருவாரூரில் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் பேரளத்தில் நடைபெற்ற 45-ஆவது மாநில ஜூனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் விருதுநகர் மாவட்ட அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

மாநில அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பெற்ற விருதுநகர் மாவட்ட அணிக்கு கோப்பையை பரிசாக வழங்கினார் அமைச்சர் ஆர். காமராஜ்.
திருவாரூரில் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் பேரளத்தில் நடைபெற்ற 45-ஆவது மாநில ஜூனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் விருதுநகர் மாவட்ட அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
முதல் இரண்டு நாள் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றன. இறுதி நாளில் கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் மோதிய விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்ட அணிகளில் 27 புள்ளிகளை பெற்று விருதுநகர் அணி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. 24 புள்ளிகளை பெற்று ஈரோடு மாவட்ட அணி 2-ஆம் இடமும், மூன்றாம் இடத்தை கடலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அணிகள் பெற்றன.போட்டியில் சிறப்பாக விளையாடி சிறந்த வீரர் பட்டத்தை விருநகர் மாவட்ட அணி வீரர் மணிகண்டன் பெற்றார். முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், மாவட்ட அமெச்சூர் கபடி கழகத் தலைவர் கமலகண்ணன், செயலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

