திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இங்கிலாந்து பந்துவீச்சு: இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்!

இந்திய அணியின் ரிஷப் பந்த், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக பந்த் அணியில் இடம்பெற்றுள்ளார்...

News image
Updated On :18 ஆகஸ்ட் 2018, 9:45 am

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்திய அணி ஏற்கெனவே டி 20 தொடரை வென்று, ஒரு நாள் போட்டித் தொடரை இழந்தது. பின்னர் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு டெஸ்ட்களில் இந்தியா தோல்வியடைந்தது. இங்கிலாந்து 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் நாட்டிங்ஹாம் டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ரூட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியின் ரிஷப் பந்த், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக பந்த் அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் அணியில் தவன், பூம்ரா ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளார்கள். இதனால் முரளி விஜய், குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இங்கிலாந்து அணியில் கரணுக்குப் பதிலாக ஸ்டோக்ஸ் இடம்பெற்றுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.