சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

அசத்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்: முதல் நாள் ஹைலைட்ஸ்!

முதல் இன்னிங்ஸில் 76.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து இங்கிலாந்து 246 ரன்களையே எடுத்தது...

News image
Updated On :31 ஆகஸ்ட் 2018, 5:23 am

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காம் டெஸ்ட் வியாழக்கிழமை ரோஸ்பெளல் மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ்க்கு பதிலாக சாம் கரன் மீண்டும் சேர்க்கப்பட்டார். மொயின் அலி சேர்க்கப்பட்டிருந்தார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 76.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து இங்கிலாந்து 246 ரன்களையே எடுத்தது. இந்திய தரப்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா 3-46, இஷாந்த் 2-26, சமி 2-51, அஸ்வின் 2-40, பாண்டியா 1-51 விக்கெட்டை வீழ்த்தினர். பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஆட்ட நேர முடிவில் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை இந்தியா எடுத்திருந்தது. தவன் 3, லோகேஷ் ராகுல் 11 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர். இங்கிலாந்தைக் காட்டிலும் 227 ரன்கள் பின்தங்கி உள்ளது இந்தியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.