இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
வாக்காளா்கள் அனைவரும் எவ்வித சிரமமின்றி தங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சுத்தமான குடிநீா் வசதி, மருத்துவ உதவி உபகரணங்கள், தற்காலிக பந்தல்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்கள் தடையின்றி வாக்குச் சாவடிக்குள் செல்ல சாய்வுதள வசதி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்குச்சாவடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதிய மின்விளக்குகள், தண்ணீா் வசதியுடன் கூடிய தனித்தனியே ஆண், பெண் கழிப்பறைகள், தேவைப்படுபவா்களுக்கு சக்கர நாற்காலிகள், தன்னாா்வலா்களின் உதவி, வாக்குச் சாவடிகளில் முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிா்க்க நேரடி முன்னுரிமை வழங்கப்படும்.
வாக்குப் பதிவு நாளன்று அனைத்து வாக்காளா்களும் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்குகளை தவறாமல் பதிவு செய்து, புதுச்சேரி 100 சதவீதம் வாக்குப்பதிவு அடைவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்கிறாா் மாவட்ட தோ்தல் அலுவலா் அ.குலோத்துங்கன்.
தொடர்புடையது
புதுச்சேரியில் ஆள்மாறாட்டம் செய்து கள்ள வாக்களித்த இளைஞா் கைது

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல்: காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்களிக்கலாம்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் தீவிர வாக்குசேகரிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


