புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழக வீரர் விஜய் சங்கரின் அதிரடி ஆட்டத்தால் நியூஸிலாந்து ஏ அணியை வென்றது இந்திய ஏ அணி!

நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி முத்திரை பதித்துள்ளார் தமிழக வீரரான விஜய் சங்கர்...

News image
Updated On :7 டிசம்பர் 2018, 9:52 am

எழில்

பாண்டியாவுக்கு அடுத்ததாகப் பொருத்தமான ஆல்ரவுண்டரை இந்தியத் தேர்வுக்குழு தேடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி முத்திரை பதித்துள்ளார் தமிழக வீரரான விஜய் சங்கர்.

நியூஸிலாந்தின் மவுண்ட் மெளங்கனியில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா ஏ - நியூஸிலாந்து ஏ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய ஏ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தது நியூஸிலாந்து. ரூதர்ஃபோர்டு 70, நீஸம் 79 ரன்கள் எடுத்தார்கள். இந்தியத் தரப்பில் கெளல் 2 விக்கெட்டுகள் எடுத்தார். தமிழக வீரர் விஜய் சங்கர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

கடினமான இலக்கை 49 ஓவர்களில் எட்டியது இந்திய ஏ அணி. ஸ்ரேயஸ் ஐயர் 54, மணீஷ் பாண்டே 42, இஷான் கிஷன் 47 ரன்கள் எடுத்தார்கள். 5-வதாகக் களமிறங்கிய விஜய் சங்கர் 80 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய ஏ அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.