புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மணீஷ் பாண்டே சதம், மீண்டும் அசத்திய விஜய் சங்கர்: நியூஸிலாந்து ஏ அணியைத் தோற்கடித்த இந்திய ஏ அணி!

இந்த வெற்றியையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட அதிகாரபூர்வமற்ற ஒருநாள் தொடரை இந்திய ஏ அணி வென்றுள்ளது...

News image
Updated On :10 டிசம்பர் 2018, 12:20 pm

எழில்

நியூஸிலாந்தின் மவுண்ட் மெளங்கனியில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா ஏ - நியூஸிலாந்து ஏ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய ஏ அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்தது. 26 வயது வில் யங் 102 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர் ஒர்க்கர் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியப் பந்துவீச்சாளர்களில் கலீல் அஹமது, சயினி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 

கடினமான இந்த இலக்கை 49 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பில் அடைந்தது இந்திய ஏ அணி. ஸ்ரேயஸ் ஐயர், விஜய் சங்கர் தலா 59 ரன்கள் எடுத்தார்கள். கேப்டன் மணீஷ் பாண்டே, 109 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். முதல் ஆட்டத்தில் விஜய் சங்கர் 87 ரன்கள் எடுத்தார். 2-வது ஆட்டத்திலும் அரை சதமெடுத்து இந்திய அணியின் வெற்றிகளில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இந்த வெற்றியையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட அதிகாரபூர்வமற்ற ஒருநாள் தொடரை இந்திய ஏ அணி வென்றுள்ளது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.