இந்திய கேப்டன் கோலியின் செயல்பாடு சிறுபிள்ளைதனமாகவும், மரியாதை குறைவாகவும் இருந்தது என ஆஸி. அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜான்சன் கண்டித்துள்ளார்.
பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸி. அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த ஆட்டத்தில் கேப்டன் கோலி-ஆஸி.
கேப்டன் டிம் பெய்ன் ஆகியோர் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் நெஞ்சோடு மோதிக் கொள்ள முயன்றனர். அப்போது நடுவர் கிறிஸ் கஃப்பானே தலையிட்டு எச்சரித்து அமைதி ஏற்படுத்தினார்.
இதற்கிடையே தான் தரக்குறைவாக எதுவும் பேசவில்லை என விராட் கோலியும், போட்டி மனப்பான்மையோடு மோதிக் கொண்டோம் என பெய்னும் கூறியிருந்தனர்.
இச்சம்பவம் குறித்து மிச்செல் ஜான்சன் புதன்கிழமை கூறியதாவது:
ஆட்டம் முடிவுற்றதும் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி, பார்த்து பாராட்டுவது வழக்கம். ஆனால் விராட் கோலியால் இதை செய்ய முடியவில்லை. டிம் பெய்னுடன் கைகுலுக்கிய அவர், கண்களால் பார்க்க முடியவில்லை. இது மரியாதை குறைவாகும். இதர வீரர்களைக் காட்டிலும் கோலி எப்போதுமே ஒருபடி மேலே தான் உள்ளார். ஆனால் பெர்த் டெஸ்டில் அவரது செயல்பாடு சிறுபிள்ளைதனமாக இருந்தது. தொடர் தொடங்கும் முன்பு தான் மோதல்களில் ஈடுபட மாட்டேன் என கூறியதை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.
தான் முற்றிலும் மாறி விட்டதாக கூறியிருந்தார். எனது முந்தைய அனுபவங்கள், தற்போது பார்வையாளர் என்ற அடிப்படையிலும் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்றார் ஜான்சன்.
கோலி-பெய்ன் மோதல் வேடிக்கையாக இருந்தது-லாங்கர்:
இந்தியாவின் ஆக்ரோஷ போக்கு எனக்கு பிடித்தமானதாக இருந்தது. அதே நேரத்தில் கோலி-பெய்ன் மோதல் வேடிக்கையாக காணப்பட்டது என ஆஸி. அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை கூறியதாவது:
கோலி-பெய்ன் ஆகியோர் மோதல் எல்லையை தாண்டவில்லை. ஒருவரை ஒருவர் தரக்குறைவாக பேசிக் கொள்ளவில்லை. இதனால் அது வேடிக்கையாக இருந்தது. அந்த மோதலை நான் ரசித்தேன். இரு கேப்டன்களும் ஆட்டத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் நடந்தனர்.
எங்கள் அணி, இந்தியாவின் ஆக்ரோஷத்தை எதிர்கொண்டு வென்றுள்ளது. பந்தை சேதப்படுத்தி விவகாரத்துக்கு பின் ஆஸி. அணி வென்ற முதல் டெஸ்ட் இது. இதனால் நிம்மதி கிட்டியுள்ளது. ரிஷப் பந்த் அவுட்டானவுடன், எங்கள் அணியின் வெற்றி உறுதியாகியது. டிம் பெய்ன் கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார். நாதன் லயன் அற்புதமாக பந்துவீசினார். கோலி உலகிலேயே சிறந்த வீரராக உள்ளார் என்றார் லாங்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







