ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் எடுத்த தமிழக வீரர்: அபினவ் முகுந்த் சாதனை!
ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ள தமிழக வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் அபினவ் முகுந்த்...


ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ள தமிழக வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் அபினவ் முகுந்த்.
ஹிமாசல பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் 2-வது இன்னிங்ஸில் சதமடித்துள்ளார் முகுந்த். இதன்மூலம் ரஞ்சி போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்துள்ள தமிழக வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு எஸ். ஷரத் 6597 ரன்கள் எடுத்ததே தமிழக அணி சார்பாக ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் எடுத்ததாக இருந்தது. இந்நிலையில் இன்று 72 ரன்கள் எடுத்தபோது அச்சாதனையை முறியடித்தார் முகுந்த். சதமடித்தபோது தமிழக அணி சார்பாக முகுந்த் 6626 ரன்கள் எடுத்திருந்தார்.
ரஞ்சிப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ள தமிழக வீரர்கள்
அபினவ் முகுந்த் - 6637 ரன்கள்
எஸ். ஷரத் - 6597 ரன்கள்
எஸ். பத்ரிநாத் - 6383 ரன்கள்
தினேஷ் கார்த்திக் - 6120 ரன்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...