தோனியை டி20 அணிக்கு மீண்டும் தேர்வு செய்தது ஏன்?: தேர்வுக்குழுத் தலைவர் பதில்

அவர்களிருவரும் ஓரளவு நிறைய ஆட்டங்கள் ஆடிவிட்டதால் தற்போது தோனியை மீண்டும் டி20 அணிக்குள் சேர்க்கலாம் என எண்ணினோம்... 
தோனியை டி20 அணிக்கு மீண்டும் தேர்வு செய்தது ஏன்?: தேர்வுக்குழுத் தலைவர் பதில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஆகியவற்றுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

டெஸ்ட் தொடர் முடிந்தபிறகு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் , ஜனவரி 12 முதல் தொடங்கவுள்ளது. மேலும் நியூஸிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 23 முதல் தொடங்கவுள்ள நிலையில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 6 அன்று தொடங்குகிறது. இந்த மூன்று தொடர்களுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய டி20 அணிக்கு தோனி மீண்டும் திரும்பியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான  டி20 தொடர்களில் தோனி இடம்பெறவில்லை. இந்நிலையில் அவர் அணிக்குள் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:

தோனியைப் பொறுத்தவரை, ஆறு ஆட்டங்களுக்கு அவருக்கு ஓய்வளிக்கப்படும். அதனால்  ரிஷப் பந்தும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கமுடியும் எனக் கூறியிருந்தேன். அதுதான் அவர்களுடைய தேர்வுக்கான காரணம். அவர்களிருவரும் ஓரளவு நிறைய ஆட்டங்கள் ஆடிவிட்டதால் தற்போது தோனியை மீண்டும் டி20 அணிக்குள் சேர்க்கலாம் என எண்ணினோம். 

உலகக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நம் வசம் குறைந்த ஒருநாள் ஆட்டங்களே உள்ளன. எனவே நாங்கள் அதில் பங்கேற்கத் தகுதியுள்ள 20 வீரர்களைத் தேர்வு செய்துள்ளோம். இனிமேல் அந்த 20 பேரிலிருந்துதான் அணியைத் தேர்வு செய்வோம் என்று கூறியுள்ளார். 

ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி: 

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், ஷிகர் தவன், ராயுடு, தினேஷ் கார்த்திக், கெதர் ஜாதவ், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், பூம்ரா, கலீல் அஹமது, ஷமி. 

நியூஸிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், ஷிகர் தவன், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், கெதர் ஜாதவ், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, கிருனால் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், பூம்ரா, கலீல் அஹமது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com