இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இந்தியாவும், 2-ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றிபெற்றன.
இதையடுத்து இந்தத் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிச.26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அபாரமாக ஆடிய புஜாரா 106 ரன்கள் குவித்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்குச் சுருண்டது. சிறப்பாக பந்துவீசி ஆஸி. அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த ஜஸ்ப்ரீத் பும்ரா 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இந்நிலையில், 292 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு பேட் கம்மின்ஸ் பந்துவீச்சு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன. அதிகபட்சமாக அறிமுக வீரர் மயங்க் அகர்வால் 42 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 399 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 4-ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸி. அணி மேலும் 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இதனால் 176 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஜினி - 173 திரைப்படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றம்?

பிரசார களத்தில் சரியான போட்டி! தவெக பிரசார வாகனத்தை தெறிக்க விட்ட திலகபாமா!

காங்கிரசை கலைத்து விடுவார் ராகுல் காந்தி: நடிகை விந்தியா பேச்சு
கேரளத்தில் வாக்குப் பதிவு முடிந்து 3 நாள்களாகியும் தரவுகளை வெளியிடாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


