பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உலக ஜூனியர் டேபிள் டென்னிஸ்: மானவ் தக்காருக்கு வெள்ளி

லக்ஸம்பர்க்கில் நடைபெற்ற ஐடிடிஎஃப் உலக ஜூனியர் சர்கியூட் ஃபைனல்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் மானவ் தக்கார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

News image
வெள்ளிப் பதக்கத்துடன் மானவ் தக்கார் (இடது ஓரம்).
Updated On :5 பிப்ரவரி 2018, 7:35 pm

DIN

லக்ஸம்பர்க்கில் நடைபெற்ற ஐடிடிஎஃப் உலக ஜூனியர் சர்கியூட் ஃபைனல்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் மானவ் தக்கார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லக்ஸம்பர்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த மானவ் தக்காரும், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவின் கனாக் ஜாவும் மோதினர். விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒவ்வொரு செட்டையும் இருவரும் அடுத்தடுத்து கைப்பற்ற, வெற்றிக்கு இருவருக்கும் சமவாய்ப்பு நீடித்து வந்தது.
கனாக்கிற்கு கடுமையாக போட்டியளித்த மானவ் இறுதியில் 3-4(11-9, 3-11, 11-9, 6-11, 3-11, 11-9, 6-11) என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு வெள்ளி வென்றார்.
தோல்விக்குப் பிறகு பேசிய மானவ், 'கனாக் சிறப்பாக ஆடினார். இந்த ஆட்டம் சவால் நிறைந்த ஒன்றாக இருந்தது. எனினும், நான் செய்த சில தவறுகளை சாதகமாக்கிக் கொண்ட கனாக், அதை புள்ளிகளாக மாற்றி வெற்றி பெற்றார். இறுதிச்சுற்று வரை முன்னேறியதில் மகிழ்ச்சி' என்றார்.
முன்னதாக மானவ் தனது அரையிறுதியில் எகிப்தின் யூசஃப் அப்தெல் அஸிஸை 11-8, 11-8, 11-5, 11-8 என்ற நேர் செட்களில் வீழ்த்தியிருந்தார். அஸிஸ் தனது குரூப் சுற்றின்போது கனாக் ஜாவை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த ரஷியாவின் இவானின் டெனிஸை 11-3, 12-10, 11-9, 11-6 என்ற செட்களில் அமெரிக்காவின் தரவரிசைப்படுத்தப்படாத இளம் வீரர் வென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.