மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஐந்தாவது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா இந்தியாவை பேட்டிங் செய்ய அழைப்பு! 

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:14 pm

DIN

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, தற்பொழுது 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட்எலிசபெத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் செவ்வாயன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பீல்டிங்கினைத் தேர்வு செய்தது. எனவே தற்பொழுது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா:

ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே,  ஸ்ரேயாஸ் அய்யர், டோனி, ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா.

தென்ஆப்பிரிக்கா:

மார்க்ரம் (கேப்டன்), ஹசிம் அம்லா, ஜேபி டுமினி, டி வில்லியர்ஸ், டேவிட் மில்லர், ஹெயின்ரிச் கிளாசன், ஏண்டில் பெலுக்வாயோ, ககிசோ ரபாடா, நிகிடி, மோர்னே மோர்க்கல், தப்ரய்ஸ் ஷாம்சி,

போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்ற இந்தியாவும், தொடரில் தக்க வைக்க தென் ஆப்பிரிக்காவும் போராடும் என்பதால் போட்டியில் சூடு பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.