2018 உலகக் கோப்பை ஹாக்கி தொடர் குறித்து சர்வதேச ஹாக்கி சம்மேளனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2018-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடர் மொத்தம் 19 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இவை மொத்தம் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- முதல் பிரிவு: அர்ஜென்டினா, நியூஸிலாந்து, ஸ்பெயின், ஃபிரான்ஸ்
- 2-ஆம் பிரிவு: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா
- 3-ஆவது பிரிவு: பெல்ஜியம், இந்தியா, கனடா, தென் ஆப்பிரிக்கா
- 4-ஆவது பிரிவு: நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான்
இதில் நவம்பர் 28-ந் தேதி தொடங்கும் லீக் சுற்றுப்போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள இதர அணிகளுடன் மோதுகின்றன. இதில் அனைத்து பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.
2-ஆம் மற்றும் 3-ஆம் இடம்பிடிக்கும் அணிகளுக்கு இடையில் அடுத்த சுற்றுப்போட்டிகள் நடைபெற்று அவற்றில் வெல்லும் அணிகளும் டிசம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் 8 அணிகளுக்கு இடையிலான நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் இடம்பெறும்.
பின்னர் டிசம்பர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் முதலிடம் பிடித்த 4 அணிகளுடன் நாக்-அவுட் சுற்றில் முன்னேறிய 4 அணிகளும் பலப்பரீட்சை நடத்தும்.
இதையடுத்து டிசம்பர் 15-ம் தேதி அரையிறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன. டிசம்பர் 16-ந் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


