யு-19 உலகக் கோப்பை: நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான்!

பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான்...
யு-19 உலகக் கோப்பை: நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான்!
Updated on
1 min read

பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான ரஹ்மனுல்லாவும் இப்ராகிமும் சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தார்கள். 117 ரன்கள் வரை நியூஸிலாந்து அணியால் முதல் விக்கெட்டை வீழ்த்தமுடியவில்லை. ரஹ்மனுல்லா 69 ரன்களிலும் இப்ராகிம் 68 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இந்த நல்ல தொடக்கத்தைப் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் நன்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். பகிர் ஷா 67 ரன்கள் எடுக்க பின்வரிசை வீரரான அஸ்மதுல்லா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூஸிலாந்தை நிலைகுலையச் செய்தார். 23 பந்துகளில் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் 300 ரன்கள் தாண்ட பெரிதும் உதவினார். 

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. 

அஸ்மதுல்லா
அஸ்மதுல்லா

இதன்பிறகு ஆப்கானிஸ்தான் வீரர்கள் பந்துவீச்சில் அசத்தினார்கள். முஜீப், குவாயிஸ் அகமத் என இரு சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் வந்தவேகத்தில் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார்கள். இருவரும் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு வழிவகுத்தார்கள். இதனால் 28.1 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது நியூஸிலாந்து. 

202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு நுழைந்ததன் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com