இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டிகளின் போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது.
பந்தை தடுக்க முயன்ற போது அவரது இடதுகை விரலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு விரல் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் டி20 அணியில் இருந்து பும்ரா நீக்கப்பட்டார். மேலும் ஒருநாள் தொடரில் அவர் இடம்பெறுவதும் கேள்விக்குரியாகியுள்ளது.
அவருக்கு பதிலாக இந்திய ஏ அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர், இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்று வீரர்களாக ஒருநாள் அணியில் அக்ஷர் படேல் மற்றும் டி20 அணியில் க்ருணால் பாண்டியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கூட தற்போது இந்திய ஏ அணியில் இடம்பிடித்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
க்ருணால் பாண்டியா, தற்போது இந்திய அணியில் நட்சத்திர ஆல்-ரவுண்டராக திகழும் ஹார்திக் பாண்டியாவின் மூத்த சகோதரர் ஆவார். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரின் போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், மாற்றம் செய்யப்பட்ட இந்திய டி20 அணியின் விவரம் பின்வருமாறு:
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், க்ருணால் பாண்டியா, புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், ஹார்திக் பாண்டியா, சித்தார்த் கௌல், உமேஷ் யாதவ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


