காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நான் மூன்று டி20 சதங்கள் தானே அடித்துள்ளேன்: ரோஹித் சர்மா வியப்பு!

மூன்று டி20 சதங்களில் எந்தச் சதம் சிறந்த சதம் என்று தேர்வு செய்வது மிகவும் கடினமான பணி... 

News image
Updated On :10 ஜூலை 2018, 9:37 am

DIN

இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி 20 தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. 

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான 3-ம் டி 20 கிரிக்கெட் ஆட்டம் பிரிஸ்டல் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து 198 ரன்களைக் குவித்தது.  இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹார்திக் பாண்டியா அபாரமாகப் பந்து வீசி 4/38 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கெளல் 2, சஹார், உமேஷ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். தோனி 5 கேட்சுகள் பிடித்தும் ஒரு ரன் அவுட்டை நிகழ்த்தியும் அசத்தினார்.

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 18.4 ஓவர்களிலேயே 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 5 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 56 பந்துகளில் 100 ரன்களை குவித்து ரோஹித்தும், 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 33 ரன்களுடன் பாண்டியாவும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தலா 2 சிக்ஸர், பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்தார் கோலி. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது ரோஹித் சர்மாவுக்குக் கிடைத்தது.

நியூஸிலாந்தின் காலின் மன்றோ சர்வதேச டி20 ஆட்டங்களில் மூன்று சதங்கள் எடுத்துள்ளார். அந்தச் சாதனையை நேற்று சமன் செய்தார் ரோஹித் சர்மா. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் குறைந்தபட்சம் மூன்று சதங்கள் எடுத்துள்ள முதல் வீரர் - ரோஹித் சர்மா. 

இந்நிலையில் சதமடித்த ரோஹித் சர்மாவை பிசிசிஐ இணையத்தளத்துக்காகப் பேட்டி கண்டார் தினேஷ் கார்த்திக். அப்போது, டி20 கிரிக்கெட்டில் அடித்த மூன்று சதங்களில் எது சிறந்தது என்கிற கேள்வியை எழுப்பினார் தினேஷ் கார்த்திக்.

இந்தக் கேள்வியை ஆச்சர்யத்துடன் எதிர்கொண்ட ரோஹித் சர்மா பதில் அளித்ததாவது:

மூன்று டி20 சதங்களில் எந்தச் சதம் சிறந்த சதம் என்று தேர்வு செய்வது மிகவும் கடினமான பணி. இந்தச் சதங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பது உங்களுக்கும் தெரியும். நான் இதுவரை 3 டி20 சதங்கள் மட்டுமே எடுத்துள்ளேன். நான் ஒன்றும் ஏராளமான டி20 சதங்கள் ஒன்றும் எடுக்கவில்லை. அதிலிருந்து சிறந்த ஒன்றைத் தேர்வு செய்வதற்கு. இதற்கு முன்பு என்னுடைய மூன்று ஒருநாள் இரட்டைச் சதங்களில் எது சிறந்தது என்று மக்கள் கேட்பார்கள். நான் ஒன்றையும் கூறமாட்டேன். ஏனெனில், அனைத்துமே வித்தியாசமானவை. வெவ்வேறு சூழலில் அடிக்கப்பட்டவை. ஒரு கிரிக்கெட் வீரரால் தன்னுடைய சதங்களில் சிறந்த சதம் எதுவென்று தேர்வு செய்வது மிகக் கடினம். ஏனெனில் ஒவ்வொரு சதமும் முக்கியம் என்று பேட்டியளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.