ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விராட் கோலி சதம் அடிக்க மாட்டார்: ஆஸி. முன்னணி வேகப்பந்து வீச்சாளர் கருத்து!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்கு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6 அன்று...

News image
Updated On :10 ஜூலை 2018, 12:15 pm

எழில்

இப்போதுதான் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஆரம்பித்துள்ளது. அதற்குள் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்த பரபரப்பு ஆரம்பித்துவிட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் அடிக்க மாட்டார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். சிட்னியில் நடைபெற ஒரு நிகழ்ச்சியில் இதுகுறித்து அவர் கூறியதாவது:

என்னுடைய துணிச்சலான கணிப்பு - ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி சதமடிக்க மாட்டார். இங்கு வரும் இந்திய அணியை நாங்கள் வீழ்த்துவோம் என்று கம்மின்ஸ் கூறியுள்ளார். 

விராட் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 டெஸ்ட் சதங்கள் எடுத்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 11 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளது. எனினும் ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அங்கு விளையாடிய 44 டெஸ்டுகளில் இந்திய அணி 5 டெஸ்டுகளில் மட்டுமே வென்றுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்கு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6 அன்று அடிலெய்டில் தொடங்கவுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.