ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இங்கிலாந்தை மேலும் திணறடிக்க டெஸ்ட் தொடரிலும் களமிறங்கவுள்ள குல்தீப்: விராட் கோலி சூசகம்!

டெஸ்ட் அணிக்கான தேர்வில் எதுவும் சாத்தியம். இந்திய அணித் தேர்வில் சில ஆச்சர்யங்கள் காத்திருக்கலாம்... 

News image
Updated On :13 ஜூலை 2018, 8:54 am

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 6 விக்கெட்டுகள் எடுக்க, ரோஹித் சர்மா 137 ரன்கள் குவித்தார். இருவருடைய அபாரமான பங்களிப்பினால் இந்திய அணி முதல் ஒருநாள் ஆட்டத்தில் வென்றுள்ளது.

ஏற்கெனவே டி20 ஆட்டத்திலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதால் குல்தீப் யாதவை டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து குல்தீப் கூறியதாவது:

டெஸ்ட் அணிக்கு என்னைத் தேர்வு செய்வார்கள் என நினைக்கிறேன். அடுத்தச் சில நாள்களில் இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்படவுள்ளது. அதில் தெரிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

கேப்டன் விராட் கோலி என்ன நினைக்கிறார்?

டெஸ்ட் அணிக்கான தேர்வில் எதுவும் சாத்தியம். இந்திய அணித் தேர்வில் சில ஆச்சர்யங்கள் காத்திருக்கலாம். குல்தீப் டெஸ்ட் அணியில் தன்னைத் தேர்வு செய்வதற்கான பங்களிப்பைச் செலுத்தி வருகிறார். சாஹலும்தான். இருவருடைய பந்துவீச்சையும் எதிர்கொள்ள இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறுவதைப் பார்க்கும்போது அவர்களை டெஸ்ட் அணியில் சேர்க்கவேண்டிய நிலைமையை உருவாக்கியுள்ளார்கள் என்று கூறியுள்ளார். 

கோலியின் இந்தப் பேட்டியை அடுத்து குல்தீப் யாதவ், டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் முதல் டெஸ்டில் விளையாடவும் அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 முதல் ஆரம்பமாகவுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.