ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

12 பந்துகளில் இந்திய அணிக்காகத் தனது முதல் விக்கெட்டை வீழ்த்திய அர்ஜூன் டெண்டுல்கர்! (விடியோ)

தொடக்க வீரர் மிஷாராவின் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார் அர்ஜூன் டெண்டுல்கர்.

News image
Updated On :17 ஜூலை 2018, 6:57 am

எழில்

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார். இலங்கையில் இரண்டு 4 நாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. 

இந்நிலையில் இந்தியா யு-19 - இலங்கை யு-19 அணிகளுக்கு இடையிலான முதல் நான்கு நாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றார்.

தொடக்க வீரர் மிஷாராவின் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார் அர்ஜூன் டெண்டுல்கர். 12 பந்துகளில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அணி சார்பாக அர்ஜூன் வீழ்த்தும் முதல் விக்கெட் இது.

முதல்நாள் உணவு இடைவேளையின்போது இலங்கை யு-19 அணி 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. அர்ஜூன் 5 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்துள்ளார்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.