விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் இரு மடங்கு அதிகரிப்பு!

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக...

News image
Updated On :20 ஜூலை 2018, 7:15 am

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ராய்ஜவர்தன் சிங் ரத்தோர் கூறியுள்ளார்.

மக்களவையில் நேற்று, ரத்தோர் இதுகுறித்து பதில் அளித்ததாவது: ஓய்வு பெற்ற, சர்வதேச அளவில் நாட்டுக்காகப் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களின் ஓய்வூதியத் தொகை இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தற்போது 588 விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றப்பட்ட ஓய்வூதியத்தின்படி, ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு ரூ. 20,000 வழங்கப்படுகிறது. உலகக் கோப்பை மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு ரூ. 16,000 வழங்கப்படுகிறது. ஒலிம்பிக், உலகக் கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டி போன்ற போட்டிகளில் வெள்ளி வென்ற வீரர்களுக்கு ரூ. 14,000 மற்றும் வெண்கலம் வென்ற வீரர்களுக்கு ரூ. 12,000 என்று அவர் அறிவித்துள்ளார். இந்தத் தொகை அனைத்தும் முன்பு வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை விடவும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ராத்தோர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.