டாக்கா: ஐபிஎல் உள்ளிட்ட வெளிநாட்டு லீக் போட்டிகளில் ஆட பிரபல வங்கதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முஸ்தாபிஜூர் ரகுமான், இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அப்பொழுது முழங்காலில் காயம் அடைந்தார். இதன் காரணமாக ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்தினால் அவர் சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியில் இடம் பெற இயலவில்லை. அந்தத் தொடரை வங்கதேச அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது.
இந்நிலையில் ஐபிஎல் உள்ளிட்ட வெளிநாட்டு லீக் போட்டிகளில் ஆட முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹஸ்சன் கூறியதாவது;
வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டியில் ஆடி காயம் அடைந்த காரணத்தால் தாய்நாட்டு அணிக்காக முஸ்தாபிஜூர் ரகுமான் விளையாட முடியாமல் போனது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். உள்ளிட்ட வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட அவருக்கு வாரியத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் அளிப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் மீண்டும் ‘தமிழ்நாடு’ சேர்ப்பு!

பேருந்து பயணத்தை செல்போனில் விடியோ எடுத்த முதல்வர் விஜய்!

எஃப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை என்பது என்ன ?
பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



