விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி 20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி 20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றன. இந்நிலையில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பர்மிங்ஹாமில் தொடங்குகிறது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசியதோடு கோலிக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கிய அடில் ரஷித் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னையில் 2016 டிசம்பரில் நடைபெற்ற டெஸ்ட் தான் அடில் ரஷித் கடைசியாக விளையாடியது. 10 டெஸ்டுகள் மட்டுமே விளையாடியுள்ள ரஷித், கடந்த பிப்ரவரி மாதம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்தார். இனிமேல் ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவதாகவும் அறிவித்தார். ஆனால் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு மீண்டும் தேர்வாகியுள்ளார் அடில் ரஷித். இவர் இதற்கு முன்பு விளையாடிய 10 டெஸ்டுகளும் வெளிநாடுகளில் விளையாடியவை. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றால் தன் சொந்த மண்ணில் அவர் விளையாடக்கூடிய முதல் டெஸ்டாக அமையும்.
முதல் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), அலாஸ்டர் குக், சாம் கர்ரன், கீடன் ஜென்னிங்ஸ், டேவிட் மலான், ஜேமி போர்டர், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆச்சரியப்படுத்தும் பேட்ரியாட் டிரைலர்!

உடைந்து விழுந்த ராட்டினம்! 10 பேர் கவலைக்கிடம்! | UP

சுந்தர். சியின் சொத்து விவரங்கள் வெளியீடு!

ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


