

போட்டிகளில் கவனம் செலுத்த செய்தித்தாள்களை படிக்க வேண்டாம் என்று தோனி அறிவுரை வழங்கியதாக ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் வீரராக இருப்பவர் ஷ்ரேயாஸ் ஐயர். இவர், தேதிய அணியில் இடம்பிடித்து விளையாடியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாகவும் ஷ்ரேயாஸ் செயல்பட்டார்.
இவர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில், நீங்கள் பெற்ற அறிவுரைகள் குறித்து பகிருமாறு ஷ்ரோயாஸ் ஐயருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும் வகையில், ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது,
"நான் இந்திய அணியில் இடம்பிடித்தவுடன், செய்தித்தாள்கள் படிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் இருந்து முடிந்த அளவுக்கு விலகி இருக்க முயற்சிக்க வேண்டும் எனவும் மகேந்திர சிங் தோனி அறிவுரை வழங்கினார்" என்றார்.
செய்தித்தாள்களை வாசிக்காமல் இருப்பது மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பது போட்டிகளில் கவனம் செலுத்த உதவும். இதனை குறிப்பிட்டு தோனி அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் .
ஷ்ரேயாஸ் ஐயர் பொதுவாக சமூக வலைதளங்களில் மிகவும் அதிகளவில் தொடர்பிலேயே இருப்பவர். இன்ஸ்டாகிராமில், புகைப்படம் மற்றும் விடியோக்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வரும் வழக்கம் உள்ளவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.