இங்கிலாந்து விளையாடும் 1000-வது டெஸ்ட்: வரலாறு முன்வைக்கும் மகத்தான சாதனைகள்!

கிரிக்கெட் உலகிலேயே 1000-ஆவது டெஸ்டில் விளையாடும் முதல் நாடு என்ற பெருமையை அந்நாடு பெற்றுள்ளது...
இங்கிலாந்து விளையாடும் 1000-வது டெஸ்ட்: வரலாறு முன்வைக்கும் மகத்தான சாதனைகள்!

கடந்த 1877-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து ஆடவர் அணி விளையாடியது.

பர்மிங்ஹாம் எட்பாஸ்டனில் இந்தியாவுடன் விளையாடும் முதல் டெஸ்ட் ஆட்டம், இங்கிலாந்து ஆடவர் அணி விளையாடும் 1000-வது டெஸ்ட் ஆட்டமாகும். இதன் மூலம் கிரிக்கெட் உலகிலேயே 1000-ஆவது டெஸ்டில் விளையாடும் முதல் நாடு என்ற பெருமையை அந்நாடு பெற்றுள்ளது. 

இதுவரை விளையாடிய 999 டெஸ்டுகளை முன்வைத்து வரிசைக்கட்டும் புள்ளிவிவரங்கள்:

999 டெஸ்டுகள்

உள்ளூரில் - 510 டெஸ்டுகள்
வெளிநாடுகளில் - 483 டெஸ்டுகள்
பொதுவான நாடுகளில் - 6 டெஸ்டுகள்

999 டெஸ்டுகளில்....

வெற்றிகள் - 357
தோல்விகள் - 297
டிராக்கள் - 345

357 வெற்றிகளில்...

உள்ளூர் வெற்றிகள் - 213
வெளிநாட்டு வெற்றிகள் - 144

297 தோல்விகளில்...

உள்ளூர் தோல்விகள் - 119
வெளிநாட்டுத் தோல்விகள் - 173
பொதுவான நாடுகளில் ஏற்பட்ட தோல்விகள் - 5

345 டிராக்களில்...

உள்ளூர் டிராக்கள் - 178
வெளிநாட்டு டிராக்கள் - 166
பொதுவான நாடுகளில் ஏற்பட்ட டிராக்கள் - 1

வெற்றி விகிதம் - 999 டெஸ்டுகள்

வங்கதேசம் - 90% 
ஜிம்பாப்வே - 50% 
நியூஸிலாந்து - 46.6%
தென் ஆப்பிரிக்கா - 40.9%
இலங்கை - 38.7%
இந்தியா 36.8%
ஆஸ்திரேலியா - 31.2%
மேற்கிந்தியத் தீவுகள் - 31.2%
பாகிஸ்தான் - 30.1%

இங்கிலாந்து: அதிக டெஸ்டுகளில் விளையாடிய வீரர்கள்

அலாஸ்டர் குக் - 156 டெஸ்டுகள்
ஜேம்ஸ் ஆண்டர்சன் - 138 டெஸ்டுகள்
அலெக் ஸ்டீவர்ட் - 133 டெஸ்டுகள்
இயான் பெல், ஸ்டூவர்ட் பிராட், கிரஹாம் கூச் - தலா 118 டெஸ்டுகள்
டேவிட் கோவர் - 117 டெஸ்டுகள்

இங்கிலாந்து: அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர்கள்

அலாஸ்டர் குக் - 32 சதங்கள்
கெவின் பீட்டர்சன் - 23 சதங்கள்
வேலி ஹேமண்ட், காலின் கெளவ்டிரே, பாய்காட், இயன் பெல் - தலா 22 சதங்கள்

இங்கிலாந்து: அதிக டெஸ்ட் ரன்கள்

அலாஸ்டர் குக் - 12,145 ரன்கள் - 156 டெஸ்டுகள்
கிரஹாம் கூச் - 8900 ரன்கள் - 118 டெஸ்டுகள்
அலெக் ஸ்டீவர்ட் - 8463 ரன்கள் - 133 டெஸ்டுகள்
டேவிட் கோவர் - 8231 ரன்கள் - 117 டெஸ்டுகள்
கெவின் பீட்டர்சன் - 8181 ரன்கள் - 104 ரன்கள்

இங்கிலாந்து: அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்

ஜேம்ஸ் ஆண்டர்சன் - 540 விக்கெட்டுகள் - 138 டெஸ்டுகள்
ஸ்டூவர்ட் பிராட் - 417 விக்கெட்டுகள் - 118 டெஸ்டுகள்
இயான் போத்தம் - 383 விக்கெட்டுகள் - 102 டெஸ்டுகள்
பாப் வில்லிஸ் - 325 விக்கெட்டுகள் - 90 டெஸ்டுகள்
ஃபிரெட் ட்ரூமேன் - 307 விக்கெட்டுகள் - 67 டெஸ்டுகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com