ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தனித்தனி அகாதெமிகளில் சாய்னா, சிந்து பயிற்சி

இந்திய பாட்மிண்டன் நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா, பி.வி.சிந்து ஆகியோர் தேசிய பயிற்சியாளர் கோபிசந்தின் கீழ் தனித் தனி அகாதெமிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

News image
Updated On :5 ஜூன் 2018, 7:15 pm

DIN

இந்திய பாட்மிண்டன் நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா, பி.வி.சிந்து ஆகியோர் தேசிய பயிற்சியாளர் கோபிசந்தின் கீழ் தனித் தனி அகாதெமிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
பாட்மிண்டன் களத்தில் வைரிகளாக விளங்கும் சாய்னா, சிந்து இருவரும் காமன்வெல்த் போட்டி இறுதிச் சுற்றில் நேருக்கு நேர் மோதினர். இதில் சாய்னா தங்கமும், சிந்து வெள்ளியும் வென்றனர். இந்நிலையில் தங்களது ஆட்டத்திறன், பயிற்சி வியூகங்களை ஒருவருக்கு ஒருவர் அறியாத வகையில் பயிற்சி பெற தீர்மானித்தனர்.
இருவருக்கும் தேசிய பயிற்சியாளர் கோபிசந்த் தனியே நேரம் ஒதுக்கி, தனித்தனி அகாதெமிகளில் பயிற்சி தருகிறார். காமன்வெல்த் இறுதிச் சுற்றில் மோதலின் விளைவே தனித்தனியாக பயிற்சி பெற எடுத்த முடிவாகும்.
இதுதொடர்பாக பி.வி.சிந்துவின் தந்தை ரமணாராவ் கூறியதாவது: ஓரே இடத்தில் இருவரும் பயிற்சி பெற்றால் அவரவர் பயிற்சி பெறுவது, வியூகம் போன்றவற்றை அறிந்துக்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பாட்மிண்டன் தனிநபர் விளையாட்டாக உள்ளதால், போட்டி அதிகம். ஒருவர் ஒருவரது பலம், பலவீனங்களை அறிந்து கொள்ளலாம். 
சிந்துவுக்கு காலை 7 முதல் 8.30 மணி வரை கோபிசந்த் பயிற்சி அளிக்கிறார். அதன்பின் இந்தோனேஷியாவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் பயிற்சி தருவர். இருவரது பயிற்சி மையங்களும் சில கி.மீ தூரத்தில் தான் அமைந்துள்ளன. தொடர்ந்து அவர் மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து ஓபன் போட்டிகளில் அடுத்த மாதம் பங்கேற்கிறார் என்றார் ரமணாராவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.