புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ரஷித் கான் மீண்டும் அபாரம்: வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்!

2-வது டி20 ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை வென்றுள்ளது ஆப்கானிஸ்தான் அணி...

News image
Updated On :6 ஜூன் 2018, 9:24 am

எழில்

2-வது டி20 ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை வென்றுள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

டெஹ்ராடூன் நகரில் நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் இந்தமுறையும் சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேச அணியில் தமிம் இக்பால் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். 

இந்த இலக்கை 4 விக்கெட் இழப்புக்கு 18.5 ஓவர்களில் எட்டிய டி20 தொடரை வென்றது ஆப்கானிஸ்தான் அணி. ஷென்வாரி 49 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்டத்தில் முகமது நபி அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார். 

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.