ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சச்சின் மகனை இந்திய அணிக்குத் தேர்வு செய்ததில் சர்ச்சை?: பிசிசிஐ தரப்பு விளக்கம்

இந்த வருடம் 19 வயதைத் தாண்டுபவர்களை அணியில் சேர்க்கக்கூடாது என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட்...

News image
Updated On :8 ஜூன் 2018, 11:16 am

எழில்

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார். இலங்கையில் இரண்டு 4 நாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. அந்தத் தொடருக்காக அர்ஜூன் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் அர்ஜூன் டெண்டுல்கரின் தேர்வு குறித்து விமரிசனங்களும் எழுந்துள்ளன. ஆஷிஷ் கபூர், கியாநேந்திர பாண்டே, ராகேஷ் பரிக் அடங்கிய தேர்வுக்குழு அர்ஜூனைத் தேர்வு செய்துள்ளது. 

தேசிய அளவிலான யு-19 போட்டியான கூச் பெஹர் கோப்பைப் போட்டியில் 5 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் அர்ஜூன். மத்திய பிரதேச அணிக்கு எதிராக ஒரே ஒருமுறை 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 43-வது இடத்தையே அர்ஜூன் பிடித்துள்ளார். 

ஆனால் 50 விக்கெட்டுகள் எடுத்துள்ள ஹிமாசல் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயுஷ் ஜம்வால் இந்திய அணிக்குத் தேர்வாகவில்லை. காரணம், அவர் 19 வயதைத் தாண்டியதால்.  

பிசிசிஐ அதிகாரி ஒருவர், ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: 

இந்த வருடம் 19 வயதைத் தாண்டுபவர்களை அணியில் சேர்க்கக்கூடாது என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெளிவான கட்டளைகளை விதித்துள்ளார். இதனால் அர்ஜூனை விடம் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தேர்வாகவில்லை. அவர்கள் ரஞ்சிப் போட்டியில் விளையாடி தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று கூறுவார் டிராவிட். எனவே அர்ஜூனை விடவும் திறமைசாலிகளாக உள்ளவர்கள் தகுதி பெறவில்லை. அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலைக் கவனித்தால், 15 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தவர்களில் அர்ஜூன் மட்டுமே வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.

மற்றவர்கள் எல்லாம் சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளார்கள். ஆல்ரவுண்டர் அஜய் தேவ் கெளட் 33 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஆனால் மிதவேகத்தில் பந்துவீசுபவர். அர்ஜூன் மட்டுமே அதிவேகப்பந்துவீச்சாளர். உனாவில் நடைபெற்ற யு-19 மண்டலங்களுக்கிடையிலான போட்டியில் ஓர் ஆட்டத்தில் 37 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார். அவருடைய திறமையைப் பயன்படுத்திக்கொள்ள தேர்வுக்குழு விரும்பியுள்ளது. அதனால்தான் தேர்வாகியுள்ளார் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.