பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ரஜினி பாடலுடன் ட்விட்டர் சாதனையைக் கொண்டாடிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்!

என் வாழ்வின் ஒரு பகுதியாக உள்ளதற்கு மிக்க நன்றி. நீங்கள் எனக்கு முக்கியமானவர்கள்...

News image
Updated On :6 மார்ச் 2018, 6:35 am

எழில்

ட்விட்டரில் ரசிகர்களுடன் எப்போதும்  உரையாடிக்கொண்டே இருக்கவேண்டும் என்று பிரியப்படுபவர் கிரிக்கெட் வீரர் அஸ்வின். 

இதுவரை மூன்றாயிரத்துக்கும் அதிகமான ட்வீட்களை வெளியிட்டுள்ள அஸ்வினை 80 லட்சம் பேர் ட்விட்டர் தளத்தில் பின்தொடர்கிறார்கள். இதையொட்டி ரஜினி நடித்த பாட்ஷா படத்தின் ரா ரா ராமையா பாடலின் சில வரிகளை டப்ஸ்மாஷ் செய்து 7 நொடி காணொளியாக அவர் வெளியிட்டுள்ளார். 

பாராட்டுகள், விமரிசனங்கள், வெற்றிகள், தோல்விகள் - அனைத்தையும் நான் பெற்றுள்ளேன். கிரிக்கெட்டில் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து மேலேறி வருகிறேன். ட்விட்டரிலும் அதேபோலத்தான். 8 மில்லியன் (80 லட்சம்) என்கிற எண்ணிக்கையை எட்டியுள்ளேன். என் வாழ்வின் ஒரு பகுதியாக உள்ளதற்கு மிக்க நன்றி. நீங்கள் எனக்கு முக்கியமானவர்கள் என்று ட்வீட் வெளியிட்டு ரசிகர்களிடம் நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.