3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

கோலி போல ஷமியும் பாலிவுட் நடிகையைத் திருமணம் செய்ய விரும்பினார்: ஷமி மனைவி பேட்டி

என்னைத் திருமணம் செய்ய முடிவெடுத்தது தவறானது என்று கூறுவார். கடந்த இரண்டு வருடங்களாக மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும்...

News image
Updated On :9 மார்ச் 2018, 10:54 am

எழில்

ஷமிக்குப் பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும் தன்னை ஓயாது துன்புறுத்துவதாகவும் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டு வருகிறார் அவருடைய மனைவி ஹசின் ஜஹான். ஹசின் அளித்த புகாரின் பேரில் ஷமி மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது கொல்கத்தாவின் லால் பஸார் காவல்துறை வழக்குப்பதிந்துள்ளது. மனைவியைக் கொடுமைப்படுத்தியது, கொலை முயற்சி செய்தது, காயப்படுத்துதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ஹசின் ஜஹான் கூறியதாவது:

என்னைத் திருமணம் செய்யும் முன்பு அவருக்கு உறவினராக இருந்த ஒரு பெண்ணை 5 வருடங்களாக விரும்பினார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்வதற்காகத் தற்கொலை செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். ஆனால் அவருடைய குடும்பத்தின் தலையீட்டால் அந்தக் கல்யாணம் நடைபெறாமல் போனது.

விராட் கோலி போல ஷமியும் பாலிவுட் நடிகையைத் திருமணம் செய்ய விரும்பினார். என்னைத் திருமணம் செய்ய முடிவெடுத்தது தவறானது என்று கூறுவார். கடந்த இரண்டு வருடங்களாக மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் என்னைத் துன்புறுத்த ஆரம்பித்தார். அவரைத் திருமணம் செய்தபிறகு என்னுடைய மாடலிங் வாழ்க்கையை விட்டுக்கொடுத்தேன். வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன். 

அவர் என்னை ஏமாற்றினால் நாட்டையும் ஏமாற்றவே செய்வார். பாகிஸ்தான் பெண்ணான அலிஸ்பா என்பவரிடமிருந்து துபாயில் பணம் பெற்றுக்கொண்டார். இங்கிலாந்தைச் சேர்ந்த முகமது பாய் என்பவர் சொன்னதன் பேரில் அந்தப் பணத்தை வாங்கினார். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. பிசிசிஐயிடமிருந்து சம்பளம் பெறும் ஷமி எதற்காக முகமது பாயிடமிருந்து பணம் பெறவேண்டும்? 2017 இலங்கைச் சுற்றுப்பயணத்தின்போது எனக்குப் பதிலாக பாகிஸ்தான் காதலியை அழைத்துச் செல்ல இருந்தார். 

தென் ஆப்பிரிக்கத் தொடருக்குப் பிறகு என்னைக் கழற்றிவிடவேண்டும் என்று எண்ணினார். அதனால் சொத்து மற்றும் இதர ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்றார். கடந்த இரண்டு வருடங்களாக என்னிடம் விவாகரத்து கோரி வருகிறார். என் இறுதி மூச்சுவரை அவரை விவாகரத்து செய்யமாட்டேன். அவருக்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன. அவரை விரைவில் நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று கூறியுள்ளார். 

Story image

ஷமியும் ஹசின் ஜஹானும் 2014-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இது ஹசினின் இரண்டாவது திருமணம். முதல் திருமணம் மூலமாக ஹசினுக்கு இரு குழந்தைகள் உண்டு. 

முதல் கணவருடன் எவ்வித தொடர்பிலும் நான் இல்லை. இரு பெண் குழந்தைகளில் ஒருவர் என்னுடன் உள்ளார். இன்னொரு பெண் படித்துக்கொண்டிருக்கிறார். ஷமியைத் திருமணம் செய்தவுடன் அவரைப் பற்றிப் புரிந்துகொண்டேன். நம்பிக்கைக்குரிய கணவராக அவர் நடந்துகொண்டதேயில்லை என்று கூறியுள்ளார் ஹசின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.