3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

பேர்ஸ்டோவ் அதிரடி சதம்: 5-வது ஒருநாள் ஆட்டத்தையும் தொடரையும் வென்றது இங்கிலாந்து அணி!

நியூஸிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் ஆட்டம் மற்றும் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது...

News image
Updated On :10 மார்ச் 2018, 5:04 am

எழில்

நியூஸிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் ஆட்டம் மற்றும் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 5-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அது சரியான முடிவு என்பதுபோல நியூஸிலாந்து அணி 49.5 ஓவர்களில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வோக்ஸ், ரஸித் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். தொடக்க வீரர் கப்தில் 47, நிகோல்ஸ் 55, சாண்ட்னர் 67 ரன்கள் எடுத்தாலும் இதர வீரர்கள் சொதப்பியதால் நியூஸிலாந்து அணியால் பெரிதளவில் ரன் குவிக்க முடியாமல் போனது. 

Story image

எளிதான இலக்கை அதிரடியான ஆட்டம் மூலம் அடைந்தது இங்கிலாந்து அணி. ஜானி பேர்ஸ்டோவும் ஹேல்ஸும் முதல் விக்கெட்டுக்கு 20.2 ஓவர்களில் 155 ரன்கள் சேர்த்து அசத்தினார்கள். ஹேல்ஸ் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோவ் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 58 பந்துகளில் சதத்தை எட்டினார். இது இங்கிலாந்தின் 3-வது அதிவேக சதமாகும். பிறகு அவர் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். 32.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து 5-வது ஒருநாள் ஆட்டத்தை வென்ற இங்கிலாந்து அணி, ஒருநாள் தொடரை 3-2 என்கிற கணக்கில் வென்றது. ஜானி பேர்ஸ்டோவ் ஆட்ட நாயகன் விருதும் கிறிஸ் வோக்ஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.