3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

2-வது டெஸ்ட்: 243 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவைச் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா; ரபாடா 5 விக்கெட்டுகள்!

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றும் வரும் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்டில்...

News image
Updated On :10 மார்ச் 2018, 5:36 am

எழில்

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றும் வரும் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி எதிர்பார்த்ததுபோல பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதேபோல அவர்கள் எதிர்பார்த்த தொடக்கமும் அமைந்தது. முதல் விக்கெட்டுக்கு வார்னரும் பேன்கிராஃப்டும் 98 ரன்கள் சேர்த்தார்கள். பேன்கிராஃப்ட் 38 ரன்களிலும் வார்னர் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ரபாடாவின் அசத்தலான பந்துவீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அதிலும் கீழ்வரிசை வீரர்களால் ரபாடாவின் ஆக்ரோஷமான பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் போனது. 3 விக்கெட்டுக்கு 161 ரன்கள் என்கிற நல்ல நிலைமையில் இருந்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 71.3 ஓவர்களில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரபாடா 5 விக்கெட்டுகளையும் என்ஜிடி 3 விக்கெட்டுகளையும் பிளாண்டர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி, 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. எல்கர் 11, ரபாடா 17 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.