ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

என் மனைவியுடன் இனி சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை: கிரிக்கெட் வீரர் ஷமி

என் மனைவியிடம் பேச என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அனுப்பினேன். ஆனால்...

News image
Updated On :16 மார்ச் 2018, 12:15 pm

எழில்

முகமது ஷமி தன்னை ஏமாற்றுவதாகவும், அவரால் தாம் குடும்ப வன்முறைக்கு ஆளாகியிருப்பதாகவும் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் ஷமி மீது மேட்ச்ஃபிக்ஸிங் குற்றச்சாட்டையும் அவர் கூறினார். இதனால் முகமது ஷமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசியு) விசாரணை நடத்த வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தன் மீதான புகார்களைத் தீர விசாரிக்க வேண்டும் என்று முகமது ஷமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

மேட்ச்ஃபிக்ஸிங் தொடர்பான குற்றச்சாட்டை பிசிசிஐ உள்ளிட்ட அமைப்புகள் தீர விசாரிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அதில் பலருடைய வாழ்க்கை அடங்கியுள்ளது. 

என் வாழ்க்கையைக் காப்பாற்ற பல முயற்சிகள் எடுத்துவிட்டேன். காப்பாற்ற ஒரு சதவிகித வாய்ப்பிருந்தாலும் அதற்காகப் போராடினேன். ஆனால் என்னை நீதிமன்றத்தில் சந்திப்பதாக ஹாசின் சொல்லிவிட்டார். இதற்குப் பிறகு எங்கள் வாழ்க்கை தொடரும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. என் மனைவியிடம் பேச என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அனுப்பினேன். ஆனால் நாங்கள் இணைந்து வாழவேண்டும் என்று அவர் ஒரு சதவிகிதம் கூட நினைக்கவில்லை. கடும் முயற்சிகள் எடுத்தபிறகுதான் இதைச் சொல்கிறேன். இனி நாங்கள் சேர்ந்து வாழ்வோம் என்கிற நம்பிக்கையில்லை.

Story image

என் சகோதரர் அவரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறுகிறார். அன்றைய தினம் என் சகோதரர் என் வீட்டிலேயே இருக்கவில்லை. இது தவறான குற்றச்சாட்டு. 

நாங்கள் திருமணம் செய்தபோது ஹாசினுக்கு முதல் திருமணம் நடந்தது குறித்து எனக்குத் தெரியாது. மெல்ல மெல்ல தான் அதுபற்றி என்னிடம் கூறினார். அவருடைய இரு பெண் குழந்தைகளையும் அவருடைய சகோதரியின் குழந்தைகள் என்று கூறியிருந்தார். எங்கள் குடும்பமும் அதை நம்பியது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.