பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றில் நடால்

ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

மான்ஃபில்ஸுக்கு பந்தை திருப்பும் நடால்.

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக, ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது சுற்றில் அவர் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸை 6-3, 6-1 என்ற செட்களில் வீழ்த்தினார்.
ஜோகோவிச் தோல்வி: போட்டித் தரவரிசையில் 10-ஆவது இடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 3-6, 6-2, 3-6 என்ற செட்களில் பிரிட்டனின் கைல் எட்மன்டிடம் தோல்வி கண்டார். 
போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தின் டேவிட் காஃபின்7-5, 6-3 என்ற செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹசியை வீழ்த்தினார்.
போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சன் 5-7, 7-(7/3), 6-2 என்ற செட்களில் கஜகஸ்தானின் மிகைல் குகுஷ்கினை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அதில் அவர் ஜெர்மனியின் பிலிப் கோல்ஷ்ரைபரை சந்திக்கிறார்.
முன்னதாக, போட்டித் தரவரிசையில் 11-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ராபர்டோ பெளதிஸ்டா அகுட் 3-6, 6-4, 5-7 என்ற செட்களில் பிலிப் கோல்ஷ்ரைபரிடம் வீழ்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.