வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இஸ்ரேலின் பிரபல கால்பந்து கிளப்புக்கு டிரம்ப் பெயர்

இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல கால்பந்து கிளப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2018, 7:43 pm

DIN

இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல கால்பந்து கிளப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேம் நகரில் உள்ளது பிரபல கால்பந்து கிளப் பெய்ட்டர் அணி. இந்நிலையில் அந்த அணி சார்பில் வெளியிடப்பட்ட கட்டுரையில் (டுவிட்டர்) பதிவிட்டுள்ளதாவது:
ஜெருசலேம் நகரம் கடந்த 70 ஆண்டுகளாக சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதற்காக காத்திருந்தது. இதற்கிடையே டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். அவரது தைரியமான முடிவால் ஜெருசலேம் நகருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. டிரம்பை பாராட்டும் வகையில் எங்கள் கிளப்பின பெயர் பெய்ட்டர் டிரம்ப் ஜெருசலேம் என மாற்றப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
பெய்ட்டர் அணி 6 முறை இஸ்ரேல் கால்பந்து லீக் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.