6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புரோ வாலிபால் லீக் விரைவில் தொடக்கம்

இந்தியாவில் முதன்முறையாக புரோ வாலிபால் லீக் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன.

News image
Updated On :14 மே 2018, 7:41 pm

DIN

இந்தியாவில் முதன்முறையாக புரோ வாலிபால் லீக் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக இந்திய வாலிபால் சம்மேளனம், புரோ வாலிபால் லீக் சிஇஓ ஜாய் பட்டாச்சார்யா கூறியதாவது:
வாலிபால் புரோ லீக் போட்டிகள் தொடங்குவது நாட்டில் இந்த விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். இதற்காக விஎஃப்ஐ பேஸ்லைன் வென்ட்சர்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான ஏலமும் தற்போது தொடங்கப்படுகிறது.
முதல் சீசனில் 6 பங்குதாரர்களை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம். ஒவ்வொரு ஏலதாரரும் 2 நகரங்களுக்கு ஏலத்தில் போட்டியிடலாம். இறுதியில் இறுதி ஏலத்தில் வெற்றி பெறும் 6 ஏலதாரர்கள் தீர்மானிக்கப்படுவர்.
வட இந்தியா, தென்னிந்தியாவில் ஒன்று என தலா 2 நகரங்களில் லீக் போட்டிகள் உள்விளையாட்டரங்கில் நடத்தப்படும். 18 ஆட்டங்கள் கொண்டிருக்கும். தேசிய அணிக்காக விளையாடும் வீரர்கள் மற்றும் சர்வதேச வாலிபால் சம்மேளனம் உறுப்பு நாடுகளின் வீரர்களும் அணிகளில் இடம் பெறுவர்.
வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் ஜூலை மாதம் நடைபெறும். ஏலப்பட்டியலில் 90 இந்திய வீரர்களின் பெயர்கள் உள்ளன. வெளிநாட்டு வீரர்களை வரைவின் மூலம் தேர்வு செய்யலாம். ஜாகர்த்தாவில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டிக்கு பின்னர் வாலிபால் லீக் போட்டிகள் தொடங்கும் என்றார் பட்டாச்சார்யா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.