மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஹனோவர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி: தங்கம் வென்றார் ஹீனா சித்து

ஹனோவர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கம் வென்றார்.

News image
Updated On :14 மே 2018, 7:55 pm

ஹனோவர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கம் வென்றார்.
ஜெர்மனியின் முனிக் நகரில் அடுத்த வாரம் உலக துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதற்கு இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஹீனா சித்துவும் இதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெற்ற ஹனோவர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் அவர் பங்கேற்றார்.
மகளிர் 10 மீ ஏர்பிஸ்டல் பிரிவில் ஹீனா தங்கம் வென்றார். சக வீராங்கனையான நிவேதா வெண்கலம் வென்றார். 
பிரான்ஸ் வீராங்கனை மதில்டே லமோலை பின்னுக்கு தள்ளி ஹீனா தங்கம் வென்றார். இதுதொடர்பாக ஹீனா கூறியது: 
தற்போது எனது பயிற்சி மேம்பட்டு வருகிறது. இந்த போட்டியில் பெற்ற வெற்றி உலக துப்பாக்கி சுடும் போட்டிக்கான அனுபவத்தை தந்துள்ளது. சரியான திசையில் எனது பயிற்சி செல்கிறது என்றார்.
வரும் 22 முதல் 29-ஆம் தேதி வரை முனிக்கில் உலக துப்பாக்கி சுடும் போட்டிகள் நடக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.