பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

5-ஆவது முறையாக 'கோல்டன் ஷூ' வென்ற மெஸ்ஸி: ரொனால்டோ சாதனை முறியடிப்பு

சிறந்த கால்பந்து வீரருக்கான 'கோல்டன் ஷூ' விருதை 5-ஆவது முறையாக வென்றார் லயோனல் மெஸ்ஸி.

News image
Updated On :21 மே 2018, 2:27 pm

2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான ஜரோப்பிய 'கோல்டன் ஷூ' (தங்கக் காலணி) விருது வென்றார் கால்பந்து ஜாம்பவான் வீரர் லயோனல் மெஸ்ஸி.

உலகின் தலைசிறந்த நட்சத்திர கால்பந்து வீரர்களில் ஒருவராகத் திகழும் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி, இதை 5-ஆவது முறையாக வென்று (அதிக முறை) சாதனைப் படைத்துள்ளார்.

முன்னதாக, 2010, 2012, 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை வென்றுள்ளார். இதன்மூலம் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனையை (4 முறை) முந்தினார்.

பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வரும் லயோனல் மெஸ்ஸி, இந்த 2017-2018 சீசனில் 34 கோல்களுடன் 68 தனிநபர் புள்ளிகளைப் பெற்று இச்சாதனையைப் படைத்துள்ளார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற லாலீகா கால்பந்து தொடரிலும் அதிக கோல்களை அடித்த வீரராகத் திகழ்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.