ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இங்கிலாந்தை 184 ரன்களுக்குள் சுருட்டிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 184 ரன்களுக்குள் சுருண்டது...

News image
Updated On :25 மே 2018, 5:53 am

எழில்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 184 ரன்களுக்குள் சுருண்டது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால் அது தவறான முடிவாக அமைந்தது.

முகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகிய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தார்கள். ஒருகட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் என்கிற நிலைமையில் இருந்தது இங்கிலாந்து. ஆனால் அதன்பிறகு நிலைமை மேலும் மோசமானது. கடைசியில் 58.2 ஓவர்களில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து அணி. குக் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். ஸ்டோக்ஸ் 38 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸும் ஹசன் அலியும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி, முதல் நாள் முடிவில் 23 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி 18 ரன்களுடனும் ஹாரிஸ் சோஹைல் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.