கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஜிம்பாப்வேவுடனான முதல் டெஸ்ட்: வெற்றி பெறுமா வங்கதேசம்?

ஜிம்பாப்வே அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 321 ரன்களை சேஸ் செய்யும் வங்கதேச அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது. 

News image

புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி

Updated On :5 நவம்பர் 2018, 7:13 pm IST

ஜிம்பாப்வே அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 321 ரன்களை சேஸ் செய்யும் வங்கதேச அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது. 

வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 282 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்ஸ் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

வங்கதேச அணி சார்பில் தைஜூல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளையும், நஸ்முல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், அபு ஜாயெத் மற்றும் மஹமதுல்லா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதைத்தொடர்ந்து, வங்கதேசம் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதனால், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அரிஃபுல் ஹக் 41 ரன்கள் எடுத்தார். 

ஜிம்பாப்வே அணி சார்பில் சதாரா மற்றும் ராசா தலா 3 விக்கெட்டுகளையும், ஜார்விஸ் 2 விக்கெட்டையும், வில்லியம்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 141 ரன்கள் என வலுவான முன்னிலையுடன் ஜிம்பாப்வே அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணி முதலிரண்டு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 1 ரன் எடுத்திருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக 2-ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், இன்று 3-ஆவது நாள் தொடங்கியது. இதில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான மசகட்சா அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேசமயம் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், ஜிம்பாப்வே அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய தைஜூல் இஸ்லாம் 2-ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தினார். 

வங்கதேச அணியின் வெற்றிக்கு 321 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதையடுத்து, இலக்கை விரட்டி களமிறங்கிய வங்கதேச அணி 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 295 ரன்கள் உள்ளது. லிட்டன் தாஸ் 14, இம்ருல் கெய்ஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

இந்தப் போட்டியில் இன்னும் 2 நாட்கள் மீதமுள்ளதால், நிச்சயம் ஏதேனும் ஒரு அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.