இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டம்: இரட்டைச் சதம் அடித்தார் அக்‌ஷத் ரெட்டி!

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 2-வது நாளின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 523 ரன்கள்

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:17 pm

எழில்

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 2-வது நாளின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 523 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற ஹைதராபாத், பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாளன்று அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. அக்‌ஷத் ரெட்டி 114, சந்தீப் 74 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

27 வயது அக்‌ஷத் ரெட்டி தனது சிறப்பான ஆட்டத்தை இன்றும் தொடர்ந்தார். சந்தீப் சதமடித்த பிறகு 130 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் எடுத்த நிலையில் அக்‌ஷத் ரெட்டி - சாய்ராம் ஜோடி தமிழக அணியை மேலும் வெறுப்பேற்றியது. நிதானமாக விளையாடிய அக்‌ஷத் ரெட்டி இரட்டைச் சதமெடுத்து அசத்தினார்.

ஹைதராபாத் அணி 2-ம் நாளின் முடிவில்  177 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 523 ரன்கள் எடுத்துள்ளது. அக்‌ஷத் ரெட்டி 248 ரன்களுடனும் மிலிந்த் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். தமிழக வீரர்களின் தரப்பில் விக்னேஷ், முகமது, ரஹில் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள். இன்னும் இருநாள்களே மீதமுள்ள நிலையில் ஹைதராபாத் அணி இந்த ஆட்டத்தில் அதிகப் புள்ளிகள் எடுக்கும் நிலையில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.