டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறவுள்ளார் டு பிளெஸ்சிஸ்!
டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வருவோம். அதுவே என்னுடைய கடைசி சர்வதேச சுற்றுப்பயணமாக இருக்கும் ...


2020 டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அத்துடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்சிஸ் அறிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வருவோம். அதுவே என்னுடைய கடைசி சர்வதேச சுற்றுப்பயணமாக இருக்கும் என நினைக்கிறேன். எனவே டி20 உலகக் கோப்பையை மிகவும் எதிர்பார்க்கிறேன் என்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
34 வயது டு பிளெஸ்சிஸ் 2012-ல் டெஸ்டில் அறிமுகமானார். அதற்கு முந்தைய வருடம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 54 டெஸ்டுகளிலும் 124 ஒருநாள் மற்றும் 41 டி20களில் அவர் விளையாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...