சர்வதேச வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று மீண்டும் சாதித்த தமிழ்ப் பெண்!

ஆஸ்திரேலியாவின் கேன்பராவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றுள்ளார்...
சர்வதேச வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று மீண்டும் சாதித்த தமிழ்ப் பெண்!

ஆஸ்திரேலியாவின் கேன்பராவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றுள்ளார்.

மகளிர் சேபர் பிரிவின் இறுதிச்சுற்றில் இங்கிலாந்தின் எமிலியை 15-12 என்கிற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார் சென்னையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான பவானி தேவி. 44 வருட காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியில் ஓர் இந்திய வீராங்கனை தங்கம் வென்றுள்ளது இதுவே முதல்முறை. 

2018 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் 8 இடங்களுக்குள் இடம்பெறாததால் ஆசியப் போட்டிக்கு பவானி தேவி தேர்வாகவில்லை. எனினும் அந்த வருத்தத்தை உடனே உதறித் தள்ளிவிட்டு காமன்வெல்த் போட்டியில் சாதித்துள்ளார்.

தற்போது இந்தியாவுக்குத் திரும்பியுள்ள பவானி தேவி, அடுத்ததாக எம்பிஏ தேர்வில் கவனம் செலுத்தப்போவதாகக் கூறியுள்ளார். 

கடந்த ஆண்டு உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் பவானி தேவி. சர்வதேச வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதையடுத்து மற்றொரு சர்வதேசப் போட்டியில் பவானி தேவி தங்கம் வென்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com