அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

4-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார் மேக்னஸ் கார்ல்சன்!

செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் கருணாவை வென்று மீண்டும் உலக சாம்பியன் ஆகியுள்ளார் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென்... 

News image
Updated On :29 நவம்பர் 2018, 5:14 am

செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் கருணாவை வென்று மீண்டும் உலக சாம்பியன் ஆகியுள்ளார் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென். 

லண்டனில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியனான கார்ல்சென்- அமெரிக்காவின் ஃபபியானோ கருணா இருவரும், பட்டத்துக்காக இதுவரை நடைபெற்ற 12 ஆட்டங்களில் மோதிய நிலையில் அனைத்து ஆட்டங்களுமே சமனானது. பிறகு இருவரும் ரேபிட் டைபிரேக் ஆட்டத்தில் விளையாடினார்கள். 

ரேபிட் டைபிரேக் ஆட்டத்தின்படி, அதிவிரைவு நேரக் கட்டுப்பாடு கொண்ட 4 ஆட்டங்களில் இருவரும் விளையாடுவார்கள். இந்த ஆட்டத்தில் 25 நிமிடங்களும், ஒரு நபருக்கு காய் நகர்த்துதலுக்காக கூடுதலாக 10 விநாடிகளும் வழங்கப்படும். இதன்மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இந்நிலையில், டை பிரேக் ஆட்டத்தில் 3-0 என வென்று மீண்டும் உலக சாம்பியன் ஆகி சாதனை படைத்துள்ளார் 27 வயது கார்ல்சன். 26 வயது கருணா, 1972-ல் பாபி ஃபிஷருக்குப் பிறகு உலக சாம்பியன் பட்டம் வெல்லும் அமெரிக்க வீரர் என்கிற பெருமையை அடைய நினைத்தார். ஆனால் கார்ல்சன் அதற்கு இடமளிக்கவில்லை. 

2013-ல் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தைத் தோற்கடித்தது உலக சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றார் கார்ல்சன். 2014-ல் மீண்டும் ஆனந்தைத் தோற்கடித்து உலக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டார். 2016-ல் செர்ஜி கர்ஜாகின்னை வென்றவர் தற்போது கருணாவையும் வென்று நான்காவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.