மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

நூலிழையில் உயிர் பிழைத்தேன்: மேத்யூ ஹைடன்

நூலிழையில் உயிர் பிழைத்ததாக பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தெவித்தார்.

News image
Updated On :8 அக்டோபர் 2018, 5:18 pm IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் மேத்யூ ஹைடன் (46). மொத்தம் 103 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஹைடன் ஆஸ்திரேலிய அணிக்காக 15 வருடங்கள் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்கள் அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

கிரிக்கெட் மட்டுமின்றி சர்ஃபிங் விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் சர்ஃபிங் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஆஸ்திரேலியாவின் கடலோர நகரமான குயின்ஸ்லாந்தில் வசித்து வந்ததால் இதில் அவருக்கு சிறு வயது முதல் ஆர்வம் இருந்ததாக கூறியிருந்தார்.

Story image

இந்நிலையில், குயின்ஸ்லாந்து நகரத்துக்கு அருகில் அமைந்துள்ள ஸ்டார்ப்ரோக் தீவில் தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் விடுமுறையைக் கழிக்கச் சென்றுள்ளார். அங்கு தனது மகனுடன் சர்ஃபிங்கில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளார்.

இதனால் கழுத்து மற்றும் முதுகுப்பகுதியில் எலும்பு முறிவு மற்றும் தசைகள் கிழிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.