தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பாட்மிண்டன் நட்சத்திரங்கள்: சாய்னா-காஷ்யப்புக்கு டிசம்பர் 16-இல் திருமணம்

இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா நெவால்-பாருபல்லி காஷ்யப் இணைக்கு வரும் டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2018, 1:03 am IST


இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா நெவால்-பாருபல்லி காஷ்யப் இணைக்கு வரும் டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனை சாய்னா நெவால், காஷ்யப் இருவரும் கடந்த 2005 முதல் பயிற்சியாளர் கோபிசந்த்திடம் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகின்றனர். அவர்களது காதல் குறித்து நீண்ட காலமாக வதந்தி பரவி வந்த நிலையில் தற்போது சாய்னா தங்கள் காதலை அவர் உறுதி செய்துள்ளார்.
28 வயதான நெவாலுக்கும், 32 வயதான காஷ்யப்புக்கும் இடையே வரும் டிசம்பர் 16-ஆம் தேதி திருமணம் நடக்கிறது. விளையாட்டில் கவனம் செலுத்துவதற்காக இருவரும் தங்கள் திருமணத்தை ஒத்தி வைத்து வந்தனர். அண்மையில் நடைபெற்ற ஜாகர்த்தா ஆசியப் போட்டியில் சாய்னா வெண்கலம் வென்றார். 
கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சானியா மிர்ஸா-பாக். கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல்-கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
அவ்வரிசையில் தற்போது சாய்னாவும்-காஷ்யப்பும் திருமணம் செய்ய உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.