மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 152 ரன்களுடன் 20-ஆவது சதம் அடித்த ரோஹித் சர்மா, சச்சின், வார்னரை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கோலி-ரோஹித் இணை அதிரடியாக ஆடி 246 ரன்களை சேர்த்தது. 20-ஆவது சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் பெற்றார். மேலும் கோலி ஆட்டமிழந்த போதிலும், நிலைத்து ஆடிய ரோஹித் வெற்றிக்கு வித்திட்டார். 152 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஏற்கெனவே சச்சின், வார்னர் ஆகியோர் 5 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்திருந்தனர். ஆனால் ரோஹித் அதை முறியடித்து 6 முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
மேலும் அவர் மூன்று இரட்டை சதத்தையும் அடித்த பெருமைக்கு உரியவராக திகழ்கிறார். நாங்கள் 5-ஆவது முறை சேர்ந்து இரட்டை சதத்தை சேர்த்துள்ளோம். இவ்வாறு இணைந்து ஆடும் போது, அணி தான் பலன் பெறும். சிறப்பானதாக இருந்தது என கோலி பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 4 ஆயிரம் காவலா்கள் பாதுகாப்பு

புதுகையில் ஓய்ந்தது தோ்தல் பிரசாரம்

வெண்ணைமலை கோயில் நிலப்பிரச்னைக்கு தீா்வு: அதிமுக வேட்பாளா் இறுதிகட்ட பிரசாரத்தில் பேச்சு

தமிழ்நாட்டையும், மக்களையும் பாதுகாக்க உறுதியுடன் செயல்படுவோம்: கே.என். நேரு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


