புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

டி20 ஆட்டம்: இந்திய மகளிர் ஏ அணி வெற்றி

ஆஸி. மகளிர் ஏ அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் ஏ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 8:10 pm


ஆஸி. மகளிர் ஏ அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் ஏ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு நாள் ஆட்டத் தொடரை ஆஸி. ஏ அணி வென்ற நிலையில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸி. ஏ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்தது. 
பின்னர் ஆடிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தானா 40 பந்துகளில் 72 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கெளர் 39 பந்துகளில் 45 ரன்களையும் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆல்ரவுண்டர் பூஜா 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் இந்தியா 6 விக்கெட்டை இழந்து 163 ரன்களுடன் வெற்றி இலக்கை எட்டியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.