சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தமிழக ரஞ்சி அணியின் கேப்டனாக 24 வயது இந்திரஜித் நியமனம்!

ஆல்ரவுண்டர் பாபா இந்திரஜித், தமிழக ரஞ்சி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :23 அக்டோபர் 2018, 6:19 am

ஆல்ரவுண்டர் பாபா இந்திரஜித், தமிழக ரஞ்சி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து ரஞ்சி அணியில் விளையாடவுள்ள தமிழக அணி நாளை அறிவிக்கப்படவுள்ளது. கடந்த வருடம் தமிழக அணியின் கேப்டனாக முகுந்த் பதவி வகித்த நிலையில் தற்போது இந்த மாற்றம்  நடைபெற்றுள்ளது. 

42 முதல்தர ஆட்டங்கள் விளையாடியுள்ள இந்திரஜித், 2662 ரன்கள் எடுத்துள்ளார். ஏழு சதங்கள். அதிகபட்சமாக 200 ரன்கள் எடுத்துள்ளார். 

குரூப் பி அணியில் தமிழ்நாடு, தில்லி, பஞ்சாப், பெங்கால், மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் உள்ளன. திண்டுக்கல் நகரில் நவம்பர் 1 அன்று  மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை விளையாடவுள்ளது தமிழக அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.