தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் வார்னர்: மைதானத்தை விட்டு சில நிமிடங்கள் வெளியேறியதால் பரபரப்பு!

உள்ளூர் போட்டி ஒன்றில் பங்கேற்ற வார்னர், பாதி ஆட்டத்தில் வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார்...

News image
Updated On :27 அக்டோபர் 2018, 6:52 am

வார்னரையும் சர்ச்சைகளையும் பிரிக்கமுடியாது. ஏற்கெனவே ஒரு வருடத் தடையில் இருக்கும் வார்னர், தற்போது மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

சிட்னியில் இன்று நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் பங்கேற்ற வார்னர், பாதி ஆட்டத்தில் வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

ராண்ட்விக் - பீட்டர்ஷேம் அணிக்காக விளையாடிய வார்னர், வெஸ்டர்ன் சப்பர்ப்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது எதிரணியினரின் நடவடிக்கைகளில் அதிருப்திக்கு ஆளாகி, திடீரென மைதானத்தை விட்டு வெளியேறினார். எதிரணியினர் தன்னை ஸ்லெட்ஜிங் செய்ததால் அதில் கடுப்பாகி, கள நடுவரிடம் விவரத்தைத் தெரிவித்துவிட்டு அவர் வெளியேறினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பிறகு வார்னரை வீரர்கள் சமாதானம் செய்தார்கள். இனிமேல் அதுபோல நடக்காது என்று உறுதியளிக்கப்பட்டதையடுத்து மீண்டும் விளையாட வந்த வார்னர்,  சதமடித்தார். 

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் ஆகிய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்து 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' நடவடிக்கை மேற்கொண்டது. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்மித்தும் வார்னரும் விளையாடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.