‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஐபிஎல் ஆச்சர்யம்: ஹைதராபாத் அணியிலிருந்து தில்லி டேர்டெவில்ஸ் அணிக்குத் திரும்புகிறார் ஷிகர் தவன்!

தான் குறைவான விலைக்குத் தேர்வானதாக ஷிகர் தவன் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது...

Published On :

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரரான ஷிகர் தவன், தில்லி டேர்டெவில்ஸ் அணிக்குத் திரும்புகிறார். ஐபிஎல் போட்டியில் 11 வருடங்களுக்கு முன்பு தில்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்ற ஷிகர் தவன் மீண்டும் அதே அணியில் இடம்பெறவுள்ளார்.

ஷிகர் தவனை தில்லி அணிக்குப் பரிமாற்றம் செய்துள்ள ஹைதராபாத் அணி அதற்குப் பதிலாக விஜய் சங்கர், அபிஷேக் வர்மா, ஷபாஸ் நதீம் ஆகிய மூன்று வீரர்களைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2018 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 5.20 கோடிக்கு தவனைத் தேர்வு செய்தது ஹைதராபாத் அணி. தான் குறைவான விலைக்குத் தேர்வானதாக ஷிகர் தவன் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த வருட ஏலத்தில் விஜய் சங்கரை ரூ. 3.20 கோடிக்கும் நதீமை ரூ. 3.20 கோடிக்கும் அபிஷேக்கை ரூ. 55 லட்சத்துக்கும் தேர்வு செய்ததுள்ளது தில்லி அணி. 

2008-ம் வருடம் தில்லி அணிக்கு விளையாடிய ஷிகர் தவன் அதன்பிறகு இரு வருடங்கள் மும்பைக்காக விளையாடினார். அதன்பிறகு தொடர்ந்து ஹைதராபாத் அணியில் இடம்பெற்று வருகிறார். 2013-ல் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கியதற்கு முன்பாக டெக்கன் சார்ஜர்ஸ் அணியில் இடம்பெற்றார். 

சன்ரைசர்ஸ் அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரராக உள்ளார் தவன். 91 ஆட்டங்களில் 2768 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 125.13. இந்த வருட ஐபிஎல்-லில் 497 ரன்கள் எடுத்துள்ளார். ஹைதராபாத் அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் இரண்டாம் இடம் பெற்றார். 

வீரர்களின் பரிமாற்றம் குறித்து தில்லி, ஹைதராபாத் ஆகிய இரு அணிகளிலிருந்தும் அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.